Bharata Naatai Paril Uyarthida || பாரத நாட்டை பாரில் உயர்த்திட

0

சேவை என்பது அறமாகும்
வாழ்வதில் மூழ்கிட நலமாகும்
சேவை மூச்சாய் கொண்டே நம்மில்
அர்பண உணர்வு மலரட்டும்

ஆழியில் நீரை வாரியெடுத்தே
பொழியுது மழையாய் மேகங்கள்
அழகாய் பாரில் நல்லொளி காட்டி
விண்வலம் வரும் மதி கதிரவனும்

துயரப்படுவோர் கண்ணீர் துடைத்திட
கைகளை கொடுத்தான் கடவுளுமே
கருணை உள்ளம் கொண்டே அவரின்
கண்ணீர் மாற்றி களிகொள்வோம்

உயிர்களின் நலனைக் கருதி உழைப்பது
உண்மையில் வேள்வி வழிபாடே
ஏகிடுவோம் நாம் அனைவரும் ஒன்றாய்
ஆத்ம சமர்பண திருவடியில்

கிராமம் நகரம் மலை வனமெங்கும்
சேவாலய மணி ஒலிக்கட்டும்
சிறகு விரித்தே நவயுக பாரத
பறவை வானில் பறக்கட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *