Indha Naadu Hindu Naadu
இந்த நாடு ஹிந்துநாடு ஹிந்து மக்கள் சொந்த நாடு
சந்த்ர சூர்யர் உள்ளவரை ஹிந்து நாடிது – எங்கள் நாடிது
ஹிந்து தர்மம் என்றவுடன் பரந்த மனப்பான்மையோடு
சர்வதர்ம சமத்துவழும் நினைவு வந்திடும்
எம்மதமும் சம்மதம் என்று சொன்ன முந்தையரின் நினைவு வந்திடும் பெருமை தந்திடும் (இந்த நாடு)
பரந்த மனப்பான்மையினை பலவீனம் என நினைத்து
பாரதத்து வெளிமதங்கள் வலை விரித்தன
ஆசைகாட்டி அச்சுறுத்தி மதத்தைமாற்றிபண்பைமாற்றி
தேசத்தையே அடிமை செய்ய சதிகள் செய்தன- துரேகம் செய்தன (இந்த நாடு)
ஹிந்து மக்கள் வேறுபட்டு இழிவுசொல்லி தாழ்வு சொல்வி
மதமாற்றம் சக்திகட்கு உறுதுணையானோம்
நாடுதுண்டு ஆனபின்பும் ‘பரந்தமனப்பான்மை’ பேசி
கேடுதன்னை உணர்ந்திடாது உதவிகள் செய்தோம்
வளர்ந்திட செய்தோம் (இந்து நாடு)
வீட்டினிலே இருக்கும்போதும் ஓட்டுப்போட செல்லும்போதும்
ஹிந்துவாக வாழ்ந்திடாது இழிவு தேடினோம்
மாறுபட்டதிந்த நிலை கேடு கெட்ட முந்தைநிலை
வீறு கொண்டெழுந்ததின் று ஹிந்து சக்தியே – தர்ம சக்தியே (இந்த நாடு)
ஒன்றுபட்ட ஹிந்து சக்தி வென்று தீரும் என்ற உண்மை
நன்குணர்ந்து நாமும் இன்று ஒன்று கூடுவோம்
பேட்டைதோறும் ஒன்றுகூடி நாட்டைப்பற்றி சிந்தைசெய்து
கேட்டைப் போக்கி வலிமையுள்ள நாட்டினைக் காண்போம் விரைவினில் காண்போம்….. (இந்த நாடு)